என்ன செய்ய போகிறார் விஜய்: கூட்டணிக்கு கட்சி கிடைக்காமல் தவிக்கும் தவெக
தினகரனின் அமமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யூ டர்ன் அடித்து பாஜக பக்கம் வண்டியை தினகரன் கமலாலயம் பக்கம் திருப்பியுள்ளதால் இருந்த காங்கிரசை மட்டுமே நம்பி தவெக தவித்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆட்சியில் பங்கு என கூறி கூட்டணி கதவை விஜய் திறந்து வைத்து இருக்கிறார். திமுக கூட்டணியில் காங்கிரசு, விசிக கட்சிகளுக்கு விஜய் வலை வீசி பார்த்தார். ஆனால் ஆரம்பம் முதலே விசிக தலைவர் திருமா தவெக கூட்டணியை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாக்கூர் மூலம் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காங்கிரசை தவெக கூட்டணி கொண்டு வரும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பிரவீன் சக்ரவர்த்தியும் தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசி இருந்தார்.
இதனிடையே தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க தவெக தரப்பு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. டிடிவி தினகரனும் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து, விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் தவெக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென தனது மனதை மாற்றி கொண்டு மீண்டும் என்டிஏ கூட்டணியில் தினகரன் இணைந்து இருக்கிறார். தேமுதிகவும் என்டிஏ கூட்டணியில் இணையும் என்றே தெரிகிறது. இதனால் காங்கிரசை மட்டும் தவெக நம்பி இருப்பதால், கூட்டணிக்கு கட்சி கிடைக்காமல் வியூகம் வகுக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார்.
What's Your Reaction?

