தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

Nov 21, 2023 - 11:00
Nov 21, 2023 - 15:05
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா

மாற்றுத்திறனாளியின் நிலத்தை பணத்தை பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு பட்டா வழங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி அடுத்த மங்களக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளி.இவருக்கு சொந்தமாக 2.15 ஏக்கர் நிலம் உள்ளது.

இவரின் நிலத்தின் அருகே பழனியம்மாள் சண்முகம் ஆகியோரின் நிலம் 981 சதுர அடி உள்ளது.இந்நிலையில், நாங்கள் தங்கள் நிலத்தை அளந்து கொடுக்கும்படி நில அளவையரிடம் கேட்கும்போது அளந்து கொடுக்காமல் பக்கத்து நிலத்தினர் பணம் வழங்கி அளந்து தரும்படி கேட்டதால் நில அளவையர் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு என்னுடைய நிலத்தினையும் 200 சதுர அடி அவர்கள் நிலம் என அளந்து தந்துள்ளனர்.

என் நிலம் குறித்து கேட்கும்போது, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் எடுத்து கொள்ளுங்கள் என நில அளவையர் தெரிவிப்பதாகவும், இதற்கு உடந்தையாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளதாகவும் மாற்றுத்திறனாளி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாற்றுத்திறனாளி தன் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow