மத்திய குழு 2வது நாளாக சென்னை புறநகர் பகுதிகளில் ஆய்வு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

Dec 13, 2023 - 17:43
Dec 13, 2023 - 20:04
மத்திய குழு 2வது நாளாக சென்னை புறநகர் பகுதிகளில் ஆய்வு

மிக்ஜம் புயல் காரணமாக மத்திய குழு நேற்று சென்னை வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சென்னை புறநகர் பகுதியிலான அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பால்பண்ணை,சுத்திகரிப்பு நிலையம், பாடி உள்ளிட்ட இடங்களை நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மத்திய குழு அதிகாரிகள் பவ்யா பாண்டே,  சிவகரே, விஜயகுமார் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆவடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.இது குறித்து மத்திய குழு ஒரு வாரத்தில் அறிக்கை  தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்து விட்டு சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow