வில்லோனியில் மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

மக்னா காட்டு யானை இறந்து கிடப்பதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்

Nov 20, 2023 - 17:32
Nov 20, 2023 - 19:03
வில்லோனியில் மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

பொள்ளாச்சி வனசரகத்திற்கு உட்பட்ட வில்லோனி பகுதியில் மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் இருந்து கும்கி உதவியுடன் பிடித்து வரப்பட்டு பொள்ளாச்சி வனசரகத்தில் விடப்பட்ட மக்னா யானை மலை அடிவாரத்தில் உள்ள சரளப்பதி கிராமத்தில் விளை நிலங்களை சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தது.இந்த  யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மக்னா யானையை பிடிக்க பொள்ளாச்சி அடுத்த சரளப்பதி பகுதியில் கும்கி யானைகள் முகாமிட்டு கண்காணிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த ஜூலை மாதம் கும்கி யானைகளில் உதவியுடன் மக்னா காட்டு யானையை பிடித்து கழுத்தில் காலர் ஐடி பொருத்தி வால்பாறை வனச்சரகத்தில் விடப்பட்டது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

கடந்த ஒரு வாரமாக காலர் ஐடி ஒரே இடத்தில் இருப்பது வனத்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மக்னா காட்டு யானை இறந்து கிடப்பதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், இந்த மக்னா யானை மலை பகுதியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் யானைக்கு பொருத்தப்பட்ட காலர் ஐடி'யின் நகர்வு இல்லாததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஊழியர்களை அனுப்பி பார்த்தபோது யானை இறந்தது தெரியவந்தது. மேலும் வனத்துறை மருத்துவர்கள் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்த பிறகு யானையின் இறப்பிற்கு காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow