அரசியலுக்கு வருவீங்களா? - அதெல்லாம் சொல்றதுகில்லை.. விஜய்யுடன் பேசிய அரசியலை சொல்லாத பிரசாந்த்..! 

Feb 26, 2024 - 20:31
அரசியலுக்கு வருவீங்களா? - அதெல்லாம் சொல்றதுகில்லை.. விஜய்யுடன் பேசிய அரசியலை சொல்லாத பிரசாந்த்..! 

நெல்லையில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் பேசும் அரசியல் குறித்து வெளியே சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

நடிகர் பிரசாந்த் தனது நற்பணி மன்றம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.

இந்த நிலையில் நெல்லை மற்றும்  கோவில்பட்டியில் பிப்.26ஆம் தேதி தனது நற்பணி மன்றம் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டார். நெல்லை பாளையங்கோட்டையில் 50 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த்,  சாலையில் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் மிக முக்கியம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தான் இழப்பு குறித்த வேதனை தெரியும் என்பதால் இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே நற்பணி மன்றம் மூலம் தமிழகத்தில் ஆங்காங்கே ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நடிகர் விஜய் உடன் கோட் படத்தில்நடித்து வருகிறேன்..  எனது அந்தகன் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக அமையும்.

விஜய் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவது உண்டா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நண்பர்கள் பேசுவதை வெளியே சொல்வது சரியாக இருக்காது. அரசியலுக்கு வருவீர்களா என கேட்கிறார்கள்.. எனது மன்றத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம், அதையே தொடர்ந்து செய்து வருவோம்,  அரசியலுக்கு நிறைய பேர் இருக்காங்க” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow