ஒரு பக்கம் ‘தளபதி’யின் GOAT அப்டேட்.... மற்றொரு பக்கம் ‘தல’ தோனியின் முரட்டு சம்பவம்...
ஹாலிவுட் ஸ்டைலில் மெர்சலான பைக் சேஷிங் சீன் உடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில், இரண்டு விஜய் இணைந்து பைக்கில் செல்லும் வீடீயோ பயங்கர ட்ரெண்ட் ஆனது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சோக நிகழ்வு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவித்திருந்தார்.
ஆனாலும், தமிழகம் முழுவதிலும் விஜய் ரசிகர்கள் தங்களது ஆஸ்தான நாயகனின் பிறந்தநாளை உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும், அவருக்கு கமல்ஹாசன், பிரபுதேவா, சீமான், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக GOAT படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் ப்ராஜெக்ட்டாக உருவாகி வரும் கோட் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனை இன்னும் எகிற வைக்கும் விதமாக கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் மெர்சலான பைக் சேஷிங் சீன் உடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில், இரண்டு விஜய் இணைந்து பைக்கில் செல்லும் வீடீயோ பயங்கர ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2011 உலகக்கோப்பை நாயகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பை வெல்ல காரணாமாக இருந்த எம்.எஸ்.தோனியும், தற்போதைய சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் பைக் சாகசம் செய்வது போல் விஜய்யின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளது.
தளபதியின் பிறந்த நாள் அன்று வெளியானப் புகைப்படத்தை, கிரிக்கெட்டில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனியின் புகைப்படத்தோடு இணைத்து வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
What's Your Reaction?






