"XXXL வரைக்கும் எடை கூடிட்டேன்...ஆசைய Control பண்ணனும்" - மனம் திறந்த பிரபல நடிகை
சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை ரம்யா ஜோசஃப், தனது சீரியல் பயணம் குறித்து குமுதத்திற்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல் வந்து என்னை தொடும்’, ‘ஈரமான ரோஜாவே’ உள்ளிட்ட பிரபல சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் இதயங்களில் குடிகொண்டவர் நடிகை ரம்யா ஜோசஃப். எதார்த்த நடிப்பிற்காக பெயர் போன இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் ஒன்னு நடிகை ஆவேன் இல்லைனா Fashion Designer ஆவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. கேமரா முன்னாடி நான் நின்ன முதல் படம் நடிகர் அப்புகுட்டி ஓட ‘மன்னார்’ படம். அதுல ஒரு மாறுபட்ட கேரக்டர் கிடைச்சுது. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சும் சரியான Recognition கிடைக்காதது கொஞ்சம் வருத்தமாவே இருந்துச்சு. எனக்கு நிறைய படம் பண்ணனும், Character Artist ஆகனும்-னு ஆசை இருக்கு” என்றார்.
இதையடுத்து சின்னத்திரைக்குள் நுழைந்தது குறித்து பேசிய அவர், “என்னோட Restaurant பிசினஸ் 2022 சென்னை வெள்ளத்துல நிறைய Loss-ஐ சந்திச்சுது. அதன் பிறகு ஒரு Long Gap அப்பறம்தான் நான் சீரியல் உள்ள வந்தேன். நான் திரும்பவும் நடிகை ஆவேன்னு நினைச்சு கூட பாக்கல” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலரும் நிறைய துன்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இதே போல் தனது Weightloss Journey குறித்தும் பகிர்ந்த நடிகை ரம்யா, “எனக்கு Stress Eating அதிகமா இருந்துச்சு. அதுனால நான் Weight கூடுனது எனக்கே தெரியாம XXXL வரைக்கும் எடை அதிகரிச்சுது. 85Kg-ல இருந்தேன். கூட இருக்குறவங்களே என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடாங்க. அதுக்கு அப்பறம்தான் Naturopathy Treatment-க்கு போனேன். அங்க முழுக்க முழுக்க Juice Diet மட்டும்தான். 45 நாட்கள்ல 7 கிலோ எடை குறைச்சேன். சாப்பாடு சாப்பிட்டே ஆகனும்னு எவ்வளவு ஆசையா இருந்தாலும் அதை Control பண்ணிகிட்டு Juice Diet ஃபாலோ பண்ணுனேன். அதனால தான் என்னால ஒரு வருஷத்துலே நல்ல Weightloss பண்ண முடிஞ்சுது. சாப்பாடும் இனிப்பும் உங்க டயட்-ல கம்மி பண்ணாலே சீக்கிரம் எடை குறைக்கலாம்” என கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் கிட்ட நான் ஒரே ஒரு விஷயம் சொல்லனும்னா, தைரியமா இருங்க. என்ன பிரச்னை வந்தாலும் தைரியமா Face பண்ணுங்க. தேவையில்லாம வேற யாராச்சும் உங்களை கஷ்டப்படுத்துனாங்கனா தப்பான முடிவுகளை எடுக்கவே எடுக்காதீங்க. Overcome பண்ண முடியாத விஷயங்கள் எதுவுமே கிடையாது. எப்போதுமே மனச திடமா வச்சுக்கோங்க. ஒரு பிரச்னை வந்தால் என்ன பண்ணலாம்னு கொஞ்சம் உட்கார்ந்து யோசிங்க. நல்ல முடிவாவே எடுக்கலாம்” என தனது அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டதை ஒரு குட்டி Advice- ஆகக் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?