‘ஜனநாயகன்’ படக்கதை லீக் : ‘Good Touch Bad Touch’ மையமாக வைத்து உருவாகி உள்ளதாக தகவல்
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. ‘Good Touch Bad Touch என்பதை மையாக கொண்டு திரைப்படம் உருவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய். அவரது திரையுலகில் ஜனநாயகன் கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். இனி அரசியல் கவனம் செலுத்த போவதாகவும் அவர் அறிவித்து இருந்தார்.
மலேசியாவில் கடந்த வாரம் ஜனநாயன் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது கடைசி திரைபடம் ஜனநாயகன் என்றும், தனக்காக நின்ற ரசிகர்களுக்காக அடுத்த 30 ஆண்டுகள் அவர்களுக்காக நிற்க போவதாகவும் பேசி இருந்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் விஜயின் கடைசி படம் என்பதால், அரசியல் கலந்த திரைப்படமாக இருக்கும் என பேசப்பட்டது. ஆனால் படத்தின் மையக்கரு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) கொண்டது என பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து அவர் கூறுகையில்: சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக இப்படம் வலுவான குரல் கொடுப்பதாக பாராட்டினார்.
பெண்களுக்கு எல்லா இடங்களிலும் தவறுகள் நடந்து வருவதாகக் கூறிய அவர், பெண்கள் தைரியமாக அதைப் பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.படத்தின் மையக் கருத்து குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். “நாம் குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லித்தர வேண்டும். பெற்றோர்கள் இதை மறைக்காமல் தைரியமாக பேச வேண்டும்” என்று பிரஜின் கூறினார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதை லீக் ஆகி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
What's Your Reaction?

