மாநகராட்சி பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சி..! சென்னையில் பெண்களுக்கு ரூ.10 கோடியில் ஜிம்.. மேயர் பிரியா அறிவிப்பு..!
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 2024-2025-ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று (21.02.2024) தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை அறிவித்தார். அதில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க ’வாட்டர் ப்ரூப்’ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் LKG முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு முதன்முறையாக ஷூ, 2 செட் சாக்ஸ், மற்றும் சீருடைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களை தலைவராகக் கொண்டு ”குழந்தைகள் பாதுகாப்பு குழு” அமைக்கப்படும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பள்ளிகளில் பாலின குழுக்கள் (Gender Club) செயல்பாடுகள் - அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கான உடற்பயிற்சிக்கூடம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், சென்னை மாநகராட்சியில் தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தவிர்க்க ரூ.35லட்சம் செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட இருப்பதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும் எனவும், சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?