நயன்தாரா முதல் அனிரூத் வரை.. பாலிவுட் படத்திற்காக விருதுகளை குவிக்கும் கோலிவுட்..!

Feb 21, 2024 - 15:18
நயன்தாரா முதல் அனிரூத் வரை.. பாலிவுட் படத்திற்காக விருதுகளை குவிக்கும் கோலிவுட்..!

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் கோலிவுட்டை சேர்ந்த அனிருத், நயன்தாரா உள்ளிட்ட பலரும் விருது பெற்றுள்ளார்கள்.

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட்டில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நயந்தாரா, விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, கரீனா கபூர், ராணி முகர்ஜி, உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஜவான் திரைப்படம் மூன்று விருதுகளை குவித்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. 

அதேப் போல இப்படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1,000கோடி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பல விமர்சனங்களுக்கு உள்ளான அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், வில்லனாக நடித்திருந்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான விருதும் வழங்கப்பட்டது.

இவர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக மௌசுமி சாட்டர்ஜி மற்றும் இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக கே.ஜே.யேசுதாஸ் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. அதேப் போல அட்லீ, ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோருக்கும் 2023 ஆம் ஆண்டில் அவர்களின் பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow