"எல்லாப் பெண்களும் தகுதி வாய்ந்தவர்கள்தான்" முதல்வருக்கு குட்டு வைத்த பிரமேலதா !

ரூ.1000 தருவதாக  திமுகவினர் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை என மாற்றி பேசுகிறார்கள்- பிரமேலதா

Apr 4, 2024 - 05:25
"எல்லாப் பெண்களும் தகுதி வாய்ந்தவர்கள்தான்" முதல்வருக்கு குட்டு வைத்த பிரமேலதா !

மாதவரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தருவதாக  கூறிவிட்டு இப்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை என மாற்றி பேசுகிறார்கள். இது நியாயமானது அல்ல என கடுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சாடினார். 

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதாவரத்தில்  தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து பிரேமதா விஜயகுமார் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, 1974 காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் தான் கச்சத்தீவை தாரை வாத்து கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி காவேரி பிரச்னையும் திமுக ஆட்சியில் தான் ஆரம்பித்தது எனவும் குற்றம்சாட்டினார். 

அத்துடன், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டிய அவர், கஞ்சா விற்பனையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார். மேலும்,  தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தருவதாக  திமுகவினர் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை என மாற்றி பேசுகிறார்கள். இது நியாயமானது அல்ல, முதலமைச்சர் பெண்களுக்கு என்ன தகுதி வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான் என ஆவேசமாக உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow