அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் : இஸ்ரோ புதிய சாதனை 

அமெரிக்காவின் புளூபேர்ட் செய்ற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. 

அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் : இஸ்ரோ புதிய சாதனை 
America's 'Bluebird' satellite

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.
இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதை இஸ்ரோ நேரலை ஒளிபரப்பு செய்தது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறும்போது, “இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.

இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow