லாரி மீது கார் மோதி விபத்து…சிறுவன் உட்பட 5 பேர் பலியான சோகம்…
 
                                ஆந்திராவில் லாரி மீது கார் மோதி 2 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பிட்ரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசலு. இவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ராம நவமி உற்சவ விழாவிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காவலி பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக சென்ற கார், போகோலு மண்டலம் முங்கமுரு என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த லாரி மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காந்தா ரமணம்மா, தவுலூரி ஸ்ரீநிவாசுலு, வரலட்சுமி, கந்தா நீலிமா மற்றும் 2 வயது சிறுவன் நந்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவலி போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            