கணவன் மீது வெந்நீர் ஊற்றி பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட மனைவி மீது வழக்கு..
உத்தரப்பிரதேசத்தில் கணவன் மீது வெந்நீர் ஊற்றி பால்கனியில் இருந்து தள்ளி விட்ட மனைவி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரக்பூர் அருகே உள்ள டியோரியாவில் ஆதிஷ் ராய் - அம்ரிதா ராய் தம்பதியினர் வசித்து வந்த நிலையில், கணவன் நடத்தை மீது மனைவி சந்தேகப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனைவி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு இரவு அங்கேயே ஆதிஷ் ராய் தங்கியிருக்கிறார். அப்போது, அதிகாலை 3 மணிக்கு திடீரென எழுந்த அம்ரிதா ராய், தனது தங்கையை வெந்நீர் வைக்கச் சொல்லிவிட்டு கணவனையும் எழுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் எதிர்பாராத நேரத்தில் வெந்நீரை ஆதிஷ் மீது அம்ரிதா ஊற்றியதைத் தொடர்ந்து அம்ரிதாவின் குடும்பத்தினரே அவரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆதிஷ் அலறவே அவரை பால்கனியில் இருந்து அம்ரிதா கீழே தள்ளி விட்ட நிலையில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அம்ரிதா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?