தளபதி விஜய்.. அவர் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது.. ஜெயம்ரவி ஓபன் டாக்..!

Feb 16, 2024 - 17:58
Feb 16, 2024 - 18:17
தளபதி விஜய்.. அவர் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது.. ஜெயம்ரவி ஓபன் டாக்..!

மதுரையில் தனது ரசிகர்களுடன் சைரன் திரைப்படத்தை கண்டு ரசித்த நடிகர் ஜெயம்ரவி, விஜய்யின் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் திரைப்படம் இன்று தமிழக முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியாகிய சைரன் திரைப்படத்தை  நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். 

முன்னதாக அவரது ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பாளித்தனர். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி கூறியபோது, "மதுரை மண்ணை தொட்ட உடனே ஒரு புத்துணர்ச்சி வந்துள்ளது. முதல்முறையாக ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார் சிறப்பாக வந்துள்ளது.

மல்டி ஸ்கிரீன் இருப்பதால் ஒரு படம் 40 ஷோ போட முடிகிறது. இதில் யாருக்கும் லாஸ் ஆகவில்லை. கலெக்ஷன் கரெக்டாக தான் வருகிறது. ரசிகர் மன்ற கட்டிடம் கண்டிப்பாக கட்டப்படும். கூடிய விரைவில் வந்துவிடும், விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து கூடிய சீக்கிரம் அறிவிப்போம்.

எனக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. நடிகர் விஜயின் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. விஜய் கூப்பிட்டால் வருவீர்களா என்ற கேள்விக்கு வீட்டிற்கு கூப்பிட்டால் வருவேன். தனி ஒருவன் 2 வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  தான் கல்யாணமே நடந்தது" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow