மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி கைது

கைதியை பிடித்த காவலர்களை மதுரை சரக டிஐஜி பாராட்டினார்

Dec 22, 2023 - 15:56
Dec 26, 2023 - 15:05
மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி கைது

மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய சிறை கைதி 25 நாட்களுக்குப் பிறகு மதுரையில் பதுங்கி இருந்த நிலையில் சிறைத்துறை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், அல்லிநகரம் சுக்குவடன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(47).இவர் ஆயுள் தண்டனை சிறைவாசியாக கடந்த 2016 ஆம் நவம்பர் 24ம் தேதி முதல் மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் மாலை வேளையில் இவர் தப்பி சென்றது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர்.சிறைத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை, தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வந்தது.

இன்று காலை மதுரை அருகே ஜெயக்குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் தனிப்படை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை சிறைவாசியை 25 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறையை பிடித்த காவலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சேதுராமன் உட்பட தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி திருபழனி மற்றும் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow