லிப் ஸ்டிக் அதிகம் போட்டதால்தான் டாஃபேதார் மாதவி பணியிட மாற்றமா?
சென்னை மாநகராட்சியின் பெண் தஃபேதாரான மாதவியின் பணியிட மாற்றம் எதன் காரணமாக நிகழ்த்தப்பட்டது என்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் பெண் தஃபேதார் மாதவி பணியிட மாற்றம் பெரிய சர்ச்சையிக் கிளப்பியிருக்கும் நிலையில் மேயரை விட லிப்ஸ்டிக் அதிகம் போட்டதால்தான் பணியிட மாற்றம் செய்துள்ளனர் என்று டஃபேதார் மாதவி கூறியிருக்கிறார்.
சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியாவுக்கும், துணை மேயராக உள்ள மகேஷ் குமாருக்கும் இடையே தொடர்ந்து பல மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. குறிப்பாக ஒப்பந்த புள்ளிகளுக்கு கையொப்பம் விடுவதில் இருந்து, ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை பெறுவது வரை மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வலுத்து வந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேயர் பிரியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக மேயர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் ரகசிய பணிகள் அனைத்தும், துணை மேயருக்கு சென்று விடுகிறது என்பது மேயர் பிரியாவின் ஆதங்கமாக் இருந்துள்ளது.
அந்த வகையில் இது போன்ற ரகசியத் தகவலை கசிய விடுவது யார் என்று ஆராய்ந்த போது, மேயரின் தஃபேதராக செயல்பட்டு வந்த மாதவிதான்ன் இதைச் செய்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பிரியா நியமிக்கப்பட்ட பொழுது, அவருக்கு அடிப்படை உதவிகளை மேற்கொள்ள பெண் தஃபேதரும் நியமிக்கப்பட்டார். மேயர் பிரியாவின் தஃபேதராக செயல்பட்டு வரும் மாதவிதான், மேயர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்துத் தகவல்களையும் துணை மேயருக்குக் கசிய விடுவதாக தகவல் வந்ததை அடுத்து சொற்ப காரணத்திற்காக அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக மேயர் பிரியாவை விட, அவரது தஃபேதர் மாதவி லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயத்தை அதிக அளவில் பயன்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்று. இதுகுறித்து மேயரின் நேர்முக உதவியாளர் மூலம், பலமுறை மாதவிக்கு அறிவுறுத்தியும் அவர் லிப்ஸ்டிக் போடுவதை குறைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் லிப்ஸ்டிக் குறைவாகப் போடுமாறு எந்த அரசாணையில் உள்ளது என்றெல்லாம் மாதவி, மேயரின் உதவியாளரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் மேயரின் தஃபேதார் மாதவி திடீரென மணலி மண்டல அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து மாதவி விளக்கம் அளிக்கையில், ஒரே ஒரு நாள் மட்டும் பணிக்கு தாமதமாக வந்ததைக் காரணம் காட்டி தன்னை பணி மாறுதல் செய்து இருப்பதாகக் கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சி மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே நடைபெற்று வரும் பனி போருக்கு, தஃபேதார் மாதவி லிப்ஸ்டிக் அதிகம் பயன்படுத்துகிறார் என காரணம் கூறி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிப்ஸ்டிக் விவகாரம் பெரிய அளவில் உருவெடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறது. மாதவி பணிக்கு உரிய நேரத்தில் வராததும், அலட்சியப்போக்கோடு நடந்து கொண்டதும்தான் பணியிட மாற்றத்துக்குக் காரணமே தவிர லிப் ஸ்டிக் பயன்படுத்துவதெல்லாம் காரணமல்ல என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியிருக்கிறது.
What's Your Reaction?