கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றக்கூடாது! - ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் தொடுத்த வழக்கின் இடைக்கால உத்தரவின் படி சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வரப்பட்டுள்ளது.
இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு மாண்பமை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே தவறான கண்ணோட்டத்துடன் இயங்கும், ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கப்படுகிறது.
ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
எனவே, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?