மினி டைட்டல் பார்க் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
மழைக்காலங்களில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களை பொருத்தவரை பேரிடர் மீட்பு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் மினி டைட்டல் பார்க் ஜனவரி மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.இதன் முன்னோட்டமான கருத்தரங்கம் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) தஞ்சாவூரில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் 30 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மினி டைட்டல் பார்க் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, “தஞ்சை மாவட்டத்தில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் மினி டைட்டல் பார்க் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் எனவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் நல்ல இடமாக இது அமையும்.
மழைக்காலங்களில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களை பொருத்தவரை பேரிடர் மீட்பு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் எம்பி கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?