ஆருத்ரா வழக்கு.. RK Suresh ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு !
ஆருத்ரா வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் கேட்டுள்ளோம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
ஆருத்ரா வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் கேட்டுள்ளோம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடி கோடியாக பணம் பெற்றுவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.
ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்ற்வாளிகளான ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் மேலும் நிதி நிறுவனம் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதால் அதை மீட்க துபாய் நாட்டு அரசாங்கத்துடன் எம்.லாட் எனும் பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் மத்திய அரசு மூலமாக கடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மோசடி செய்யப்பட்ட 500 கோடி ரூபாயை துபாய் நாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் இதுவரை மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கப்பட்ட 127 சொத்துக்களைக் கண்டறிந்து, அதில் 60 சொத்துக்களை முடக்கி உள்ளதுடன் 102 கோடி வங்கி கணக்கை முடக்கி, 6.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துபாயில் பதுங்கியுள்ள நடிகர் ஆர்.கே சுரேஷ் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள ஆருத்ரா நிறுவன இயக்குநர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஆருத்ரா இயக்குநர்கள் சிக்கினால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பல அரசியல் புள்ளிகள் யார் என்பது குறித்தும் தெரியவரும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆருத்ரா வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை சென்னை அழைத்து வருவதில் காலதாமதம் ஆவது ஏன் ? எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தும் இதுவரை துபாய் நீதிமன்றத்தின் EXTRADITION TREATY ஆர்டருக்காக காத்திருக்கும் நிலை ஏன் எனவும் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே நடிகர் ஆர் கே சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆவணங்களை சமர்ப்பிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்ட நிலையில் இதுவரை ஆர்.கே.சுரேஷ் சமர்ப்பிக்கவில்லை என்றும் மேலும் எனக்கும் இந்த வழக்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே ஆர் கே சுரேஷ் தெரிவித்திருந்த நிலையில சம்பந்தமில்லாமல் எதற்காக அவரை விசாரணைக்கு அழைத்தோம் எனவும், ஆவணங்களை சமர்ப்பிக்க கூறியுள்ளோம் ஆனால் இதுவரை சமர்ப்பிக்காமல் காலம் தாமதித்து வருகிறார்ஏறும் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதின் அடிப்படையில் துபாய் போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆருத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளி ராஜசேகர் சிறையில் உள்ள நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மூன்று மாத காலமாக சிறையில் உள்ளார். சிறையில் இருக்கும் அவரை அழைத்து வர துபாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் சென்னையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகரை அழைத்து வர துபாய் செல்வார்கள் அல்லது இன்டர் போல் போலீசார் அவரை அழைத்து வந்து டெல்லியில் ஒப்படைப்பார்கள் எனவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?