சந்துகடையில் பதுக்கப்பட்ட 1081 மது பாட்டில்கள் பறிமுதல்
பறிமுதல் செய்த மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
பாப்பிரெட்டிப்பட்டியிl சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1081 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கம் உள்ளவர்.வழக்கமாக குடிக்க கூடியவர்.
இவர் இன்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள சந்து கடை நடத்தும் ராதா(55)என்பவரின் வீட்டிற்கு சென்று மது வாங்கி உள்ளார். அப்போது மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நெடியுடன் கூடிய நாற்றம் அடித்ததால் இதுகுறித்து ராதாவிடம், செல்வம் கேட்டுள்ளார்.
நன்கு போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் தலைசுற்றி, மயக்கம் அடைந்து வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையில் போலீசார் மாரியம்பட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை செய்து ராதாவின் வீட்டை சோதனையிட்டனர்.
சோதனையில் அரசு மதுபான கடையிலிருந்து வாங்கி வந்த பீர், பிராந்தி பாட்டில்கள் என, 1081 மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதனையடுத்து ராதாவை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
-பொய்கை கோ.கிருஷ்ணா
What's Your Reaction?