ரவுண்டு கட்டும் அமலாக்கத்துறை.. மீண்டும் சிக்கலில் செந்தில் பாலாஜி !

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Jan 29, 2024 - 16:09
ரவுண்டு கட்டும் அமலாக்கத்துறை.. மீண்டும் சிக்கலில் செந்தில் பாலாஜி !

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என  அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் செந்தில் பாலாஜி  வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து அந்த  மனுவிற்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்கின் விசாரணையை முடக்கி,குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும் போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதான மோசடி குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோர முடியாது என்றும், எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணையை ஜனவரி 31-ம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow