கலால் வரி வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு...

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் விசாரணை காவலை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

Mar 23, 2024 - 21:26
கலால் வரி வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு...

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தெலங்கான முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அவரை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மனும் அனுப்பி வந்தது. ஆனால் 9 முறை சம்மன் அனுப்பியும், அதனை புறக்கணித்து ஆஜராகாத முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் (ED) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் கைது நடவடிக்கை மற்றும் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக 8 நாட்கள் காவலில் வைக்க அனுமதி கொடுத்தது இரண்டுமே சட்ட விரோதமானது என்றும், அவரை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க அவருக்கு உரிமை உள்ளது என்றும், இந்த வழக்கை ஞாயிற்றுக்கிழமைக்குள் (24.3.2024) தற்காலிக தலைமை நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு பட்டியிலிடப்பட்டால்  நாளை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow