கனிமொழி தூத்துக்குடிக்கு எந்த பணியும் செய்யவில்லை...விளம்பரம் மட்டுமே தேடினார்..!

தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி எந்த பணியும் செய்யவில்லை, விளம்பரம் மட்டுமே தேடியுள்ளார் என்று தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கூறியுள்ளார்.

Mar 23, 2024 - 19:12
Mar 23, 2024 - 19:12
கனிமொழி தூத்துக்குடிக்கு எந்த பணியும் செய்யவில்லை...விளம்பரம் மட்டுமே தேடினார்..!

தூத்துக்குடி தொகுதி எம்பியாக இருந்த கனிமொழி எந்த பணியுமே செய்யவில்லை, விளம்பரம் மட்டுமே தேடி உள்ளார் என்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். 

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவசாமி வேலுமணி கூறியதாவது, "தூத்துக்குடி தொகுதி எம்பி ஆக இருந்த கனிமொழி தூத்துக்குடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு விளம்பரம் தேடி உள்ளார். நான் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், பனை தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை உயர பாடுபடுவேன். தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஆண்டுதோறும் தூத்துக்குடி மாநகர மக்கள் வெள்ளத்தின் காரணமாக தங்கள் வாழ்வாதாரங்கள் இழப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரை டெபாசிட் இழக்கச் செய்வேன்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow