மாஸ்கோ மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் - புதின்

மாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். 

Mar 23, 2024 - 22:10
மாஸ்கோ மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் - புதின்

மாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் இருக்கும் க்ரோகஸ் மாலில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "காட்டுமிராண்டித்தனமான இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யப்படும். அவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட நாளான மார்ச் 24-ஆம் தேதியை 'தேசிய துக்க தினமாக' அறிவிக்கிறேன். தாக்கியவர்கள் தப்பித்து செல்ல உக்ரைன் எல்லையை நோக்கிச் சென்றுள்ளார்கள். விசாரணை அதிகாரிகள் அவர்களை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.எங்கள் வலியை பகிர்ந்துகொள்ளும் நாடுகள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow