அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
தலைமை நீதிபதியின் பரிசீலனைக்குப் பிறகு அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று(பிப்.8) விசாரணைக்கு பட்டியிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் இன்று(பிப்.8) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார். இந்நிலையில், வழக்குகளை விசாரிக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (பிப்.7) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு பிறகு அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று(பிப்.8) விசாரணைக்கு வழக்கு பட்டியிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?