நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரக்கத்தில் திடீர் தீ விபத்து

என்.எல்.சி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரக்கத்தில் திடீர் தீ விபத்து

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரக்கத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்களின் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அதிலிருந்து அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் என்.எல்.சி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow