நடிகை கீர்த்தி சுரேஷ் கடுமையான உழைப்பாளி - நடிகர் ஜெயம் ரவி புகழாரம்
கீர்த்தி ஒரு கடுமையான உழைப்பாளி, அதுதான் அவரை இவ்வளவு பெரிய இடத்தில் வைத்து இருக்கிறது என நடிகர் ஜெயம்ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர்களின் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். இத்திரைப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது.இதில் நடிகர் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். இதில் நடிகர் ஜெயம் ரவி மேடையில் பேசுகையில், "முதலில் இந்தப் படம் ஆரம்பித்தது படத்தொகுப்பாளர் ரூபனிடம் இருந்து தான்.
நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அருமையான பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் கொடுத்திருந்தார். இந்தப் படத்திலும் ஜி.வி.தான் இசையமைக்க வேண்டும் என நினைத்து இருந்தோம், அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரம் தேவைப்பட்டது. அதற்கு கீர்த்தி சுரேஷ் சரியாகப் பொருந்தி இருந்தார்.
கீர்த்தி ஒரு கடுமையான உழைப்பாளி, அதுதான் அவரை இவ்வளவு பெரிய இடத்தில் வைத்து இருக்கிறது. அறிமுக இயக்குநர்களின் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன். என்னைக் கூட்டிச்செல்வது அவர்கள்தான். இந்தப் படம் எனக்கு ஒரு புது அனுபவம். இதில் இரண்டு விதமான தோற்றத்தில் நடித்துள்ளேன்" என்றார்.
What's Your Reaction?






