ஊட்டி : கண்களுக்கு விருந்தளிக்கும் ஜெகரண்டா மலர்கள்...
ஊட்டிக்கு செல்லும் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் இளம் கத்தரிப்பூ நிற ஜெகரண்டா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
ஊட்டிக்கு செல்லும் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் இளம் கத்தரிப்பூ நிற ஜெகரண்டா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்லும் பெரும்பாலான சாலைகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஒரு சில மரங்களில் மட்டுமே பூக்கள் பூக்கும். அவற்றில் ஜெகரண்டா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியடைவார்கள்.
இந்த மலர்கள் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பூக்கத் துவங்கி மே மாதம் வரை பூக்கின்றவை. தற்போது இந்த மலர்கள் ஊட்டி - கோவை சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - கோத்தகிரி சாலை, மசினகுடி சாலை என பல்வேறு இடங்களிலும் பூத்துக் குலுங்குகின்றன.
மசினகுடி, முதுமலை உள்ளிட்ட நீலகிரியின் பல பகுதிகளில் தற்போது பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்களும் பூத்துள்ளன.
What's Your Reaction?