"திமுகவின் பங்காளி கட்சி அதிமுக என்பதை ஊர்ஜிதம் செய்கிறார் இ.பி.எஸ்..." அண்ணாமலை விமர்சனம்...

Mar 15, 2024 - 07:21
"திமுகவின் பங்காளி கட்சி அதிமுக என்பதை ஊர்ஜிதம் செய்கிறார் இ.பி.எஸ்..." அண்ணாமலை விமர்சனம்...

திமுகவின் பங்காளிக் கட்சி அதிமுக என்பதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர்ஜிதம் செய்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளகர்களை சந்தித்த அண்ணாமலை,  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறினார். அதனைத் தவிர்த்துவிட்டு அவதூறு வழக்குகள் பதிவு செய்வதால் எவ்வித பலனும் இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் மக்கள் பதில் கேட்டால் சொல்லாமல் இருப்பதால் முதலமைச்சர் மீது அவர்களுக்கு சந்தேகம் அதிகரிப்பதாகவும் அண்ணாமலை புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அரை வேக்காடுத்தனமாக யாரை காப்பாற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்? எனக் கேள்வி எழுப்பினார். நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் முந்தரா துறைமுகத்தில் போதைப்பொருள் பிடிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது எனவும் அண்ணாமலை விமர்சித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் திமுக வாய்திறக்காமல் இருக்கும் நிலையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருப்பதை பார்த்தால், திமுக பங்காளிக் கட்சி என்பதை இ.பி.எஸ் ஊர்ஜிதம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow