வீடு திரும்பிய மம்தா... உடல்நலம் தேறுமாறு பிரதமர், ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு...

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தனர்.

Mar 15, 2024 - 08:36
வீடு திரும்பிய மம்தா... உடல்நலம் தேறுமாறு பிரதமர், ராகுல், முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு...

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்டோர், அவர் விரைவில் மீண்டுவர வேண்டுமென X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இணையத்தில் முன்னதாக வைரலானது. இந்நிலையில், கொல்கத்தா காளிகாட்டில் உள்ள தனது வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நரம்பியல், இருதயவியல், பொது மருத்துவத்துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டபோதும், வீட்டுக்குச் செல்வதாக அவர் கூறியதை அடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா விரைவில் குணமடைந்து உடல்நலம் தேற பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டார். மம்தா காயம் தொடர்பாக கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாகவும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow