வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் ?: சென்னை மாநகராட்சி பகீர்

தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் ?: சென்னை மாநகராட்சி பகீர்
Keeping a dog at home is a waste of Rs 1 lakh?

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வாக்காளர் திருத்த சிறப்பு பணிகளுக்காக கடந்த மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ப்ரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதே போன்று, சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள். நாளை முதல் வீடு வீடாக ஆய்வு செய்து உரிமம் பெறதா செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ,5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டன. இந்நிலையில் ராட்வீலர்ஸ்,பிட்புல் டெரியர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்க்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. 

மீறி வளர்க்கும்பட்சத்தில் ரூ 1 லட்ச ரூபாய் பாரதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow