பாஜக போட்டியிடும் 27 தொகுதி பட்டியல்: எடப்பாடி வெளியிட்டார்
அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதி பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ளது. பாஜகவிற்கு 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. எந்தந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என்ற பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு வெளியிட்டுவதால், பாஜக மூத்த தலைவர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தந்து இருந்தனர்.
அதன்படி, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, அவினாசி, உதகமண்டலம், கோவை வடக்கு, மதுரை தெற்கு, ராதாபுரம், விளவங்கோடு, திருவண்ணாமலைஅறந்தாங்கி, நாகர்கோவில், குளச்சல், மானாமதுரை, பத்மநாபபுரம், ராசிபுரம் தனி, திருப்பூர் தெற்கு. சாத்தூர், புதுக்கோட்டை, திருச்செந்தூர், கந்தர்வக்கோட்டை, திருப்பத்தூர், வாசுதேவநல்லூர், ஆவடி, தஞ்சாவூர், திருவாரூர், ராமாநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், தொகுதி மாறி கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. அவினாசியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதி இந்த முறை பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் சாத்தூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இருந்து பாஜகவில் இருந்து விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. அதே போன்று திருவண்ணாமலை, திருச்செந்தூர், மயிலாப்பூர், திருவாரூர். மதுரை தெற்கு ஆகிய பிரபலமான கோயில்கள் உள்ள தொகுதிகளை பாஜக கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

