"சீர்மரபு பழங்குடியினரை ஏமாற்றும் திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு...

Mar 21, 2024 - 17:36
"சீர்மரபு பழங்குடியினரை ஏமாற்றும் திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு...

நடைமுறைப்படுத்தப்படாத அறிவிப்புகளை வழங்கி சீர்மரபு பழங்குடியின மக்களை திமுக ஏமாற்றி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் சீர்மரபினர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சீர்மரபு பழங்குடியினர் பிரிவை முதலில் அட்டவணைப்படுத்திய தமிழகத்தில் இதுவரை அவர்களுக்கான சமூக மாற்றத்திற்கான நலத்திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்படவில்லை என தெரிகிறது. 

சீர்மரபுப் பழங்குடியினர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 68 சமூக சீர்மரபுப் பழங்குடியின மக்களை வஞ்சித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 4 நாட்களுக்கு முன் DNTஎன்ற ஒரே சான்றிதழ் வழங்கப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளார். 

தேர்தல் நேரங்களில் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, நடைமுறையில் பொதுமக்களை வஞ்சிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கு திமுக, நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்தும் நாடகம் என்ற சந்தேகம் எழுகிறது. விளம்பர அரசியலுக்காக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2019-ஆம் அண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்து சீர்மரபு வகுப்பினர் சான்றிதழைப் புழக்கத்தில் இருந்து நீக்கி சீர்மரபுப் பழங்குடியினர் என்ற சான்றிதழை மட்டும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow