பணப்பட்டுவாடா, பழுதாகும் சிசிடிவி கேமராக்கள்... தேர்தல் ஆணையத்திற்கு அடுத்தடுத்து பறக்கும் புகார்கள்...

1,700 வாக்குச் சாவடிகளுக்கு ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு அதிகமான அளவில் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டார்- பாலு

May 1, 2024 - 08:20
பணப்பட்டுவாடா, பழுதாகும் சிசிடிவி கேமராக்கள்... தேர்தல் ஆணையத்திற்கு அடுத்தடுத்து பறக்கும் புகார்கள்...

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ரூ.50 கோடி அளவில் பணப்பட்டுவாடா செய்திருப்பதாக பா.ம.க. வேட்பாளர் பாலு தேர்தல் ஆணையத்தில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து புகாரளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது 1,700 வாக்குச் சாவடிகளுக்கு ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு அதிகமான அளவில் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். 

20 புகார்கள் அரக்கோணம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும்,  ஓச்சேரி என்ற பகுதியில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யபட்டு பின்னர் உடனடியாக குற்றவாளிகளிடமே ஒப்படைக்கபட்டது என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இதுமட்டுமின்றி, திமுக பணம் கொடுத்தற்கான வீடியோ ஆதரத்துடன் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் சி.விஜில் செயலியில் 136 புகார்கள் கொடுத்தும் கூட ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சாடினார். மேலும், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மீது தேர்தல்  வழக்கு தொடரபடும் எனவும் பா.ம.க. வேட்பாளர் பாலு கூறினார். 
 
இந்நிலையில், தென்காசி தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளருமான ஜான்பாண்டியன், விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். அந்த தகவல் உண்மை என்கிற பட்சத்தில் அது குறித்தான ஒரு முழு அறிக்கையை வெளியிடவேண்டும் என தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow