Balakrishna: “ஒரே தள்ளு... அஞ்சலியை அசால்ட் செய்த பாலகிருஷ்ணா..” ட்ரெண்டாகும் வீடியோ!

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

May 30, 2024 - 13:10
Balakrishna: “ஒரே தள்ளு... அஞ்சலியை அசால்ட் செய்த பாலகிருஷ்ணா..” ட்ரெண்டாகும் வீடியோ!

ஐதராபாத்: தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா, ரியல் லைஃபிலும் அடிக்கடி கெத்து காட்டுவது வழக்கம். சில நேரங்களில் ஹீரோயிஷமாக இருந்தாலும், பல சம்பவங்களில் ஏதாவது சர்ச்சையில் சிக்கி சின்னாப் பின்னமாகிவிடுவார். அப்படி தற்போது பாலய்யா செய்துள்ள சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கிருஷ்ணா சைதன்யா இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்வாக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில், கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், நேஹா ஷெட்டி, அஞ்சலி ஆகியோருடன் பாலய்யாவும் மேடையேறினார். எல்லாமே நல்லாதானா போய்ட்டு இருக்கு என நினைக்கும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டார் பாலகிருஷ்ணா. அதாவது அஞ்சலியை கொஞ்சம் தள்ளி நிற்க சொல்லி சைகை காட்டுகிறார் பாலய்யா. ஆனால், அதனை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடுப்பான பாலய்யாகாரு, படங்களில் வில்லனை தள்ளிவிடுவதை போல, அஞ்சலியையும் அதே பாணியில் டீல் செய்துள்ளார். பாலகிருஷ்ணா தள்ளிவிட்டதை எதிர்பார்க்காத அஞ்சலி, சில நொடிகள் ஷாக் ஆனாலும், அதன்பின்னர் சிரித்து சமாளித்துக் கொண்டார். அதேபோல் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த நேஹா ஷெட்டியும் பாலய்யாவின் செயலை பார்த்து அதிர்ந்துவிட்டு, பின்னர் சிரித்து சமாளித்தார்.  
 
டோலிவுட்டின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா, மேடையில் வைத்து அஞ்சலியை தள்ளிவிட்டது சர்ச்சையாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் பாலய்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரசாரங்களில் பங்கேற்று வந்தார் பாலகிருஷ்ணா. அப்போதும் தன்னுடன் போட்டோ எடுக்க வந்தவரை அடித்தது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தட்டி எழுப்பி சர்ச்சையில் சிக்கியது என பாலய்யாவின் சம்பவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வரிசையில் தற்போது அஞ்சலியை தள்ளிவிட்டு ரசிகர்களால் துவம்சம் செய்யப்பட்டு வருகிறார்.

பாலய்யா ஹீரோவாக நடிக்கும் படங்களில் வரும் சண்டைக் காட்சிகள், கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக பார்ப்பவர்களை கலங்கடிக்கும். பாலகிருஷ்ணா ஒரு மிதி விட்டால், எதிரில் நிற்கும் வில்லன் பாகிஸ்தான் பார்டரில் போய் விழுவதெல்லாம் சர்வசாதாரணம். அதே நினைப்பில் அஞ்சலியையும் டீல் செய்த பாலகிருஷ்ணா எப்போது தான் திருந்துவாரோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முறையும் இப்படி ஏடாகூடமாக எதாவது செய்துகொண்டிருக்கும் பாலய்யாவுக்கு, அவரது ஸ்டைலில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow