Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த விஷேசம்... மூன்றாவது ஜூனியர் ரெடி?

சிவகார்த்திகேயன் குடும்பத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 30, 2024 - 13:53
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த விஷேசம்... மூன்றாவது ஜூனியர் ரெடி?

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது அவரது 23வது படத்தில் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக எஸ்கே 23 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவா நடித்த அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அமரன் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் இருந்து இன்னொரு பிரியாணி விருந்தும் ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது. 

அதாவது, சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதானவுடன் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், அதில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமான நிலையில் அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் ஆராதனா சினிமாவில் பாடல் பாடி அசத்த, மகன் குகன் இன்னும் மீடியா வெளிச்சத்துக்கு வராமல் உள்ளார். மகன் பிறந்ததும் அது தனது அப்பா என நெகிழ்ச்சியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இதனால் நாம் இருவர் நமக்கு இருவர் என சிவகார்த்திகேயன் செட்டில் ஆகிவிட்டார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது மூன்றாவது ஜூனியரை வரவேற்க சிவாவின் குடும்பம் ரெடியாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் குறித்து டி இமான் பேசிய வீடியோ கடும் சர்ச்சையானது. தனது விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்பதாக ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார் டி இமான். இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயனும் நீண்ட நாட்கள் விளக்கம் கொடுக்காமல் இருந்தார். இதனால் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி இடையே தகராறு என்றும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அப்போதே தனது குடும்பத்தினருடன் போட்டோ போட்டு பதிலடி கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். இப்போது வதந்தியாக கூட எந்த செய்திகளும் வர முடியாத படி செக் மேட் வைத்துள்ளார் எஸ்கே. அதேநேரம் கர்ப்பம் ஆகியுள்ள ஆர்த்திக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow