காஞ்சீபுரம்: நடிகை நயன்தாராவை காண குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

காவல்துறை உடனடியாக அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Jan 8, 2024 - 13:22
Jan 8, 2024 - 14:36
காஞ்சீபுரம்:  நடிகை நயன்தாராவை காண குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

காஞ்சிபுரம் ஜூரகேஸ்வரர் திருக்கோவிலில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாராவை பார்க்க அலை மோதிய பார்வையாளர்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது ஜீரகேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் மாதவன், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் இறுதி கட்டப் படபிடிப்பு இத்திருகோயிலில் இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள தமிழ் திரைப்பட நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த அப்பகுதி ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் நடிகை நயன்தாராவை காண அப்பகுதியில் குவிந்ததால் சற்று போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

இந்நிலையில் திருக்கோயிலில் இருந்து வெளியேறிய நடிகை நயன்தாராவை காவல்துறையினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் பத்திரமாக கேரவன் வாகனத்திற்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.அப்போது ரசிகர்கள், பொதுமக்களை பார்த்து நடிகை நயன்தாரா கையசைத்தார்.

மேலும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றதால் காவல்துறை உடனடியாக அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

 ஏகாம்பாநாதர் திருக்கோயிலுக்கு பல்வேறு மாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் இதனை அறிந்து அவர்களும் உடனடியாக பகுதிக்கு வந்த குவிந்தனர். இதனால் அவர்களையும் காவல்துறையினர்  ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow