பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. ஒர்க்அவுட்டான NIA-வின் பிளான்... முக்கிய குற்றவாளிகள் சிக்கியது எப்படி..?
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்த நபரையும், திட்டம் தீட்டிக் கொடுத்தவரையும், கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ம் தேதி குறைந்த தீவிரம்கொண்ட இரண்டு IED குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், வழக்கை கையில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விசாரணையைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, சம்பவத்துக்கு காரணமான நபர் என அறியப்படும் ஒருவர் பேருந்தில் சென்று ஹோட்டலில் வெடிகுண்டு வைத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
இதையடுத்து, கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசபீர் உசேன் - அப்துல் மதீன் தாகா ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. முசாபீர் உசேன் குண்டுவைத்ததாகவும், அப்துல் மதீன் திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், இவர்களை பற்றி துப்பு கொடுத்தால், தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் NIA அறிவித்தது.
தொடர்ந்து, போலிஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் மூலம் கிரிப்டோகரண்சி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் குண்டுவெடிப்பு நடத்த இருவரும் திட்டம் தீட்டியதாகவும், இந்நிலையில், சென்னையில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இருவரும் மாறி மாறி தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின், கொல்கத்தா அருகே இருவரும் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக, NIA அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?