தமிழகத்தில் 11 இடங்களில் சுள்ளென்று அடித்த வெயில்.. 16 ஊர்களில் ஜில்லென்று பெய்த மழை

Apr 12, 2024 - 12:13
தமிழகத்தில் 11 இடங்களில் சுள்ளென்று அடித்த வெயில்.. 16 ஊர்களில் ஜில்லென்று பெய்த மழை

தமிழகத்தில் உள்ள 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. வெயிலுக்கு இதமாக பல்வேறு ஊர்களில் ஜில்லென்று மழையும் பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

பங்குனி மாதத்தில் வெயில் பட்டையை கிளப்புகிறது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் 3 வாரங்களே உள்ளது. மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது.

 

வெயிலின் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசுகிறது. இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்கள் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்றைய தினம் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 டிகிரி செல்சியஸ் வெப்பமானது பதிவாகியுள்ளது.அதேபோல் திருச்சிராப்பள்ளியில் 100.58 டிகிரியும் திருத்தணியில்  100.94 டிகிரியும், சேலத்தில் 103.28 டிகிரியும், நாமக்கல்லில் 102.2 டிகிரியும்,மதுரை நகரத்தில் 100.4டிகிரியும் மதுரை விமான நிலையத்தில்  101.12டிகிரியும் தர்மபுரியில் 102.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது

 

பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தாலும் தென் மாவட்டங்களில் ஜில்லென்று மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி,தென்காசி,துாத்துக்குடி என தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.நெல்லை மாவட்டம் வள்ளியுர் பனக்குடியில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னுாரில் 12செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow