வடகிழக்கு மாநிலங்கள் வலிமையான வர்த்தக மையமாக மாறியுள்ளன… பிரதமர் மோடி பெருமிதம்!
தெற்காசிய, கிழக்காசிய நாடுகளுக்கு இடையே வலிமையான வர்த்தக மையாக வடகிழக்கு மாநிலங்கள் மாறியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அசாம், மேற்கு வங்கம் உட்பட 4 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை அசாம் சென்றடைந்த அவருக்கு , அம்மாநில முதல்வர் ஹிம்மந்த பிஸ்வா வரவேற்றார். இன்று காலை காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட்டு, யானை சவாரி செய்தார்.
இதையடுத்து, அருணாச்சல பிரதேசத்தில் இட்டா நகரில் நடைபெற்ற விக்சிட் பாரத் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சீலா சுரங்க சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளையும் துவங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடகிழக்கு மாநிலங்களை 7 சகோதரிகள் என்ற அழைக்கின்றனர். நாம் அவற்றை அஷ்ட லஷ்மிகளாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா தற்போது மேம்பட்டு வருகிறது என்றார். இன்று ஏழு சகோதரிகளின் வளர்ச்சியின் திருவிழாவில் கலந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்” என்றார். இந்த விழாவில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வர் பேம காண்டு கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள 17,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்து பேசிய அவர், ”டபுள் இஞ்ஜின் அரசு அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. சுகாதாரம், கட்டமைப்பு மற்றும் மின்சார உற்பத்தித்துறைகளில் வேகமாக வளர்ந்துள்ளது” என்றார்.
What's Your Reaction?