கொரோனாவுக்கு பிறகு வந்த பெரிய பாதிப்பு.. இந்திய ஆண்களுக்கு “இந்த” பிரச்சினை அதிகமாம்..! ஷாக் தகவல் சொன்ன நிபுணர்கள்..!

நுரையீரல் சார்ந்த பிரச்னை சிலருக்கு ஒரு வருடம் வரையும், மீதமுள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்றும் ஆய்வில் தகவல்

Feb 19, 2024 - 10:03
கொரோனாவுக்கு பிறகு வந்த பெரிய பாதிப்பு.. இந்திய ஆண்களுக்கு “இந்த” பிரச்சினை அதிகமாம்..! ஷாக் தகவல் சொன்ன நிபுணர்கள்..!

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பாதிப்புக்கு  பிறகு இந்தியர்களுக்கு அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வூஹான் நகரில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இதன் பிறகு உலகம் முழுவதும் வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தன.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பிறகே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் பல்வேறு பக்கவிளைவுகளை சந்தித்து வருகின்றன. இருதய நோய்ப் பாதிப்புகள் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்த் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் புதிய ஆய்வின்படி, கொரோனாவிற்கு பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களை விட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்னை சிலருக்கு ஒரு வருடம் வரையும், மீதமுள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இதே நிலையில் வாழ வேண்டி இருக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சீனர்களை விட இந்தியர்களுக்குத் தான் அதிக நோய்த்தொற்றுகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் அதிக குறைபாடு இருப்பதாகத் தோன்றுகிறது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow