இரணியல் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை

இது குறித்து இரணியல் போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 7, 2023 - 15:24
Dec 8, 2023 - 14:45
இரணியல் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியை சேர்ந்த மாரியப்பன் தனது மனைவி சித்திராவுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் மாரியப்பன் (55) மரவேலை செய்து வருகிறார்.இவருக்கு சித்ரா(50) என்ற மனைவியும் மகன்களும் உள்ளனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டம் வந்த அவர் இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை என்ற இடத்தில் வீட்டு மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகன் பாக்கியராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.மற்றொரு மகன் மாதேஸ்வரன் படித்து விட்டு சென்னையில் வேளச்சேரி அருகில் வேலை பார்த்து வருகிறார்.

மாரியப்பன் கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சினை காரணமாக நெருக்கடி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று காலை மாரியப்பன் வீட்டில் ஒருவர் வந்து பார்த்த போது கணவன் மனைவி இருவரும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது  தெரியவந்தது.

 இது குறித்து இரணியல் போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow