டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Feb 3, 2024 - 16:54
Feb 3, 2024 - 18:07
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் -  திமுக அறிவிப்பு!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டமானது  நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் நிர்வாகிகள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய அரசின் மீதான தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர். 

இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர். பாலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:

ஒன்றிய அரசின் நிதி அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு புயல் உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுகீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர்வரும்  பிப்ரவரி 8 -ம் தேதி காலை 10.00 மணியளவில் திமுக மற்றும் தோழமை  கட்சியின் எம்.பி-க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க  |  பாரத ரத்னா விருதுக்கு மட்டும் அவ்வளவு சிறப்பு என்ன..?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow