வெள்ள நிவாரணநிதிக்கு ஒரு வாரத்தில் அனைவருக்கும் டோக்கன் -உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பல்வேறு ரேஷன் கடைகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்த பிறகு பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண நிதி அளிக்கப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வெள்ள நிவாரண நிதி ஒரு வாரத்தில் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரணிபுத்தூர், முகலிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேர்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரணிபுத்தூர், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்,“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளார். ஒரு வார காலத்திற்குள் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண நிதியானது வழங்கப்படும். பல்வேறு ரேஷன் கடைகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்த பிறகு பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண நிதி அளிக்கப்படும்” என்றார்.
What's Your Reaction?