என் கார் வேண்டானு சொல்லிட்டு.. இப்போ 3 கார் மாறி.. EPS-க்கு வாழ்த்து கூறிய துணை முதல்வர்
சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி வழங்க கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் வேண்டுக்கோளை ஏற்க மறுத்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கு முன் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியை தாக்கி பேசினார். ”அவசர பணிக்காக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சித் துணை தலைவர், நான் சட்டப்பேரவையில் பதில் சொல்லும்போதெல்லாம் அவையில் இருப்பதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார். நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கேன்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புக்கூட என்னுடைய காரில் ஏறி EPS அவர்கள் செல்ல முயன்ற போதுக்கூட நான் சொன்னேன், எடுத்துட்டு போங்க..ஒன்னும் பிரச்னையில்லை என்று. அதற்கு அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள், எங்க கார் எங்கயும் தப்பா போகாதுனு சொன்னார்கள். ஆனால், இன்னிக்கு டெல்லியில் ரூட் மாறி 3 கார் மாறி.. அவுங்க கட்சி அலுவலகத்துக்கு போனதாக சொல்லியுள்ளார்கள். அதற்கு வாழ்த்துகள்” என தன் உரையில் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.”திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதலே தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் துணிந்துவிட்டனர் என்பதையே உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரின் கொலை உணர்த்துகிறது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த திமுக அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுக்குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கோரிக்கை விடுத்தோம். அதற்கு அனுமதி வழங்கவில்லை” என தெரிவித்தார்.
What's Your Reaction?






