பாம் வெடிக்கப்போகுது.. கொல்கத்தா விமான நிலையத்திற்கு மிரட்டல்.. அலர்ட் ஆன மதுரை ஏர்ப்போர்ட் !

விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Apr 27, 2024 - 18:09
பாம் வெடிக்கப்போகுது.. கொல்கத்தா விமான நிலையத்திற்கு மிரட்டல்.. அலர்ட் ஆன மதுரை ஏர்ப்போர்ட் !

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஏப்ரல் - 26 ) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், நேற்று மதியம் 1 மணியளவில் விமான நிலையத்தில் பாம் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் போலியானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கும் அச்சுறுத்தல் வரக்கூடும் என நினைத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மதுரை விமான நிலைய இயக்குனர், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளின் சார்பில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மதுரை விமான நிலையமே பரபரப்பாக காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow