இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மும்பைவாசிகள்... மணாலியில் தலைகீழாக கவிழ்ந்த பஸ்.. ஒருவர் பலி
இமாச்சலப் பிரதேசத்தில் அடல் சேது பாலம் அருகே சென்ற சுற்றுலாப்பயணிகள் பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
கோடைக் காலம் என்பதால் சுற்றுலா இடங்களில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்களும் குளிர் தேசமாக கருதப்படும் இமாச்சல பிரதேசத்திற்கு செல்வது வழக்கம்.
இமாச்சலில் தற்போது சூரிய சுற்றுலா பிரபலமாகி வருகிறது. மணாலி, சம்பா, பாலம்பூர் மற்றும் தரம்ஷாலா ஆகிய இடங்களில் இந்த சூரிய சுற்றுலா படு ஃபேமஸ்.
இந்நிலையில் மும்பையில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற 21 பயணிகள், மணாலி செல்லும் வழியான அடல் சேது பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுனரும் நடத்துனரும் பாதுகாப்பாக தப்பித்த நிலையில், பஸ்ஸில் பயணித்த 18 சுற்றுலா பயணிகளும் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் மீட்ட போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?