தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி... 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை...

May 15, 2024 - 13:54
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி... 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை...

சென்னையில், கோவில் பூசாரி ஒருவர், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்து விட்டு, பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். அவர், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அந்த கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமியின் அறிமுகம் கிடைத்து, அந்த பழக்கம் நாளைடைவில் நெருக்கமானது. இந்நிலையில், பூசாரி அந்த பெண்ணை வீட்டில் விடுவதாகக் கூறி, தனது பென்ஸ் காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு தீர்த்தம் என கூறி அதில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு, அந்த பெண்ணின் காலில் விழுந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடனே தாலியும் கட்டி நம்ப வைத்துள்ளார். ஏற்கனவே பூசாரிக்கு திருமணம் ஆனதாக கூறப்படும் நிலையில், இவரையும் திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், அந்த பெண் கர்பமாகி உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் கருவை கட்டாயபடுத்தி கலைக்கச் செய்து, அவரை துன்புறுத்தியுள்ளார். மேலும், பூசாரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அவர்களை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுப்பது குறித்தும் அறிந்துகொண்ட இந்த பெண், இது குறித்து கடந்த 9 ஆம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் முனுசாமி மீது ஏமாற்றுதல், பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த கார்த்திக் முனுசாமி, தலைமறைவாகி விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow