சண்டிகர் தேர்தல் முறைகேடு வழக்கு..! விசாரணைக்கு முன் மேயர் ராஜினாமா! ஆனாலும்.. மகிழ்ச்சியில் பாஜக! ஓ..இதுதான் ப்ளானா?!

Feb 19, 2024 - 08:50
சண்டிகர் தேர்தல் முறைகேடு வழக்கு..! விசாரணைக்கு முன் மேயர் ராஜினாமா! ஆனாலும்.. மகிழ்ச்சியில் பாஜக! ஓ..இதுதான் ப்ளானா?!

சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த மேயர் ராஜினாமா செய்தபோதும், ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பாஜகவில் இணைந்துள்ளது I.N.D.I.A கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த 30ம் தேதி பாஜக - I.N.D.I.A கூட்டணியின் முதல் நேரடிப் போட்டியாக சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 36 வாக்குகளில் ஆம்ஆத்மி-காங் ஆதரவு வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகளும் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும் ஆம்ஆத்மி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என அறிவித்த தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிகளை மீறி தானாகவே வாக்குகளை புறக்கணித்ததாகக் கூறி ஒரு வீடியோவை ஆம்ஆத்மி வெளியிட்டது. 

தொடர்ந்து ஆம்ஆத்மி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்று ஜனநாயகப் படுகொலை நடைபெறுவதை அனுமதிக்கப் போவதில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மேயர் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஆம்ஆத்மியைச் சேர்ந்த பூனம்தேவி, நேஹா, குர்சரண் ஆகிய 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.இதனால் பாஜக ஆதரவு வாக்கு எண்ணிக்கை 19 ஆகவும் ஆம்ஆத்மி வாக்கு எண்ணிக்கை 17 ஆகவும் மாற்றம் பெற்றுள்ளது.இதனால் மேயர் ராஜினாமா செய்தாலும்,மீண்டும் தேர்தல் நடைபெற்றால் பாஜக வேட்பாளரே மீண்டும் வெற்றி பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow